ஆத்திச்சூடி, திருக்குறள், இலக்கணம் மற்றும் பழமொழி

தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil Screenshot
தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil Screenshot
தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil Screenshot
தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil Screenshot
தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil Screenshot
Update
Mar 27, 2023
Developer
Category
Installs
10,000+
Rate
0
பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை யாவற்றின் அடிச்சரடும் அறம் என்பதே.

தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகளையும் அதன் துணை இலக்கணங்களையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள அற நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே காணப்படுகின்ற அறநூல்கள். இவை எண்ணிக்கையில் பதினொன்று. இவற்றில் திருக்குறளும் அடங்கும்.

2. பிற்கால அறநூல்கள். இவற்றுள், பிற்கால ஒளவையார், சிவப்பிரகாசர், குமர குருபரர் போன்றோர் எழுதிய அறநூல்கள் அடங்கும்.